கூகுள் அலோ.. வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற மெசேஜிங் ஆப்களுக்கு சவால் அளிக்க வந்துள்ள, கூகுளின் புது ஆண்ட்ராய்டு சேவை. கூகுளின் எல்லா சேவைகளையும் இணைத்து, இந்த அலோ மெசெஞ்சரை உருவாக்கியுள்ளது கூகுள். எப்படி இருக்கிறது அலோ?
உலகின் நம்பர் 1 மெசேஜிங் ஆப்பாக இருப்பதால், வாட்ஸ்அப் Vs அலோ ஒப்பீடுகளைத் தவிர்க்க முடியவில்லை. வாட்ஸ் அப் போலவே போன் நம்பர் கொடுத்துதான் 'அலோ' வைப் பயன்படுத்த முடியும். அத்துடன் நமது கூகுள் அக்கவுன்டைக் கொடுத்து, நமது பெயரைக் கொடுத்து அலோவைப் பயன்படுத்தத் துவங்கலாம். இரு நம்பர்களை ஒரே அக்கவுன்ட்டில் பயன்படுத்த முடியாது. ஒரே அக்கவுன்ட்டை வெவ்வேறு இரண்டு போன்களில் பயன்படுத்தவும் முடியாது.
இதுவும் ஒரே மெசேஜிங் ஆப்தான் என்பதால், மற்றவைகளில் இருப்பது போன்ற வாய்ஸ் மெசேஜ், ஸ்டிக்கர்ஸ், இமேஜ், வீடியோ என எல்லா வசதிகளும் இருக்கின்றன. ஆனால் வாட்ஸ் அப் போன்ற வாய்ஸ் காலிங் வசதி இதில் இல்லை. டாக்குமென்ட்களையும் இதில் அனுப்ப முடியாது. இதில் உங்களுக்கு வரும் மெசேஜ்களுக்கு ஆப்பைத் திறக்காமலேயே பதிலளிக்க உங்களால் முடியும். நீங்கள் பதிலளிக்க விருப்பம் இல்லையென்றாலும் கூட, உங்களின் மெசேஜில் இருக்கும் கருத்தை வைத்து ஆராய்ந்து, உங்களுக்கு ரிப்ளை செய்வதற்கான பரிந்துரைகளையும் அலோ வழங்குகிறது. அதனை நீங்கள் செலெக்ட் செய்தால் போதும். அதுவே ரிப்ளை செய்துவிடும். இதனால் நீங்கள் மெசேஜை படித்து ரிப்ளை செய்ய டைப் செய்யக் கூடத் தேவையில்லை.

No comments:
Post a Comment
முக்கிய குறிப்பு:
மக்கள் நண்பன் இணையதளத்திற்கு பல்வேறு ஊடகவியலாளர்களால், வாசகர்களால் மற்றும் அரசில்வாதிகளின் ஊடக இணைப்பாளர்களால் செய்திகள் மற்றும் தகவல்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் செய்திகளுக்கு மற்றும் தகவல்களுக்கு மக்கள் நண்பன் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். செய்திகளை அனுப்பி வைப்போர் நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / செய்திகளை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.
கடுமையான கருத்துக்கள் மற்றும் பிழையான செய்திகள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை பாரபட்சமின்றி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறான செய்திகள் தொடர்பாக எங்களுக்கு தெரியப்படுத்த makkalnanpan@gmail.com என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளலாம்.